Tuesday, November 15, 2016



அவள் பேச்சை  வியந்தாயோ அல்லது அவள் நடப்பை  நாடினாயோ 
அவள் உணர்வை உணர்ந்தாயோ அல்லது அவள் ஆளுமை கவர்ந்ததோ 
அவள் அருகில் இருந்தால் அறியா அமைதியை தொட்டுணர்ந்தாயோ 
அதனால் அவளை முழுதும் அறிய ஆர்வம் பிறந்ததோ 

அவன் அமைதியில் நிறைந்தாயோ அல்லது அவன் தோழமையில் துலைந்தாயோ 
அவன் திறமை தீண்டியதோ அல்லது அவன் சிந்தனை கவர்ந்ததோ 
அவன் அருகில் இருக்கும் நேரம் உலகம் மறந்தாயோ 
அதனால் அவனை முழுதும்  அறிய ஆர்வம் பிறந்ததோ 

அவள் பேசினில் அவன் பேச மறந்தானோ அல்லது அவன் அமைதில் அவள் கேட்க மறந்தாளோ 
அவன் திறமை அவள் உணர்வை மறைத்ததோ அல்லது அவள் ஆளுமை அவன் சிந்தனை எதிர்த்ததோ 
அருகில் இருந்தும் மனதில் வெற்றிடம் நிறைந்ததோ 
அதனால் இவ்வுறவு நட்பை இழந்ததோ 

Aval pechai viyandhayo aladhu aval natpai naadinayo?
Aval unarvai unardhyo aldadhu aval aalumaiyi Kavarndhadho??
Aval arigil irunthal ariyaa amaidhiyai thotrunarndhaiyo?
Adhanaal avalai muzhudhum ariya aarvam pirandhadho??


Avan amaidhiyil niraindhaayo aladhu avan thozmaiyil tholindhayo?
Avan thiramayi theendiyadho aladhu avan sindhani kavarndhadho
Avan arigil irukum neeram ulgam marandhadho ?
Adhanaal avani muzhudhum ariya aarvam pirandhadho??

Aval peechinil avan pesamarandhano aladhu Avan amaidhiyil aval ketka marandhalo
Avan thiramai aval unarvai maraithadho Aladhu aval aalumaiyi avan sindhani yedhirthado
Arugil irundhum manadhil vetridam niraindhadho
Adanal ivuravu natpai izhandho ??

No comments: